ரணிலுடன் இணைந்த மொட்டின் 12 மாவட்ட தலைவர்கள்.. அவர்களுடன் மேலும் 75 பாராளுமன்ற உறுப்பினர்கள்..
ஜனாதிபதித் தேர்தலில் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவைத் தவிர வேறு ஒருவரை நியமிப்பதற்கு எதிராக நடவடிக்கை எடுக்க ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் 12 மாவட்டங்களின் தலைவர்கள் தீர்மானித்துள்ளதாக அரசியல் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இது தொடர்பான விசேட கலந்துரையாடலொன்று நேற்று (22) இரவு கொழும்பு மலலசேகர மாவத்தையில் உள்ள இராஜாங்க அமைச்சர் ஒருவரின் இல்லத்தில் இடம்பெற்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இக்கலந்துரையாடலில் 12 மாவட்டங்களைச் சேர்ந்த பொஹொட்டு தலைவர்கள் கலந்துகொண்டுள்ளனர்.
அங்கு பெரும்பான்மை கருத்துக்கு எதிராக சென்று , மொட்டு கட்சி வேறு வேட்பாளரை நியமித்தால் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு ஆதரவளிக்க தீர்மானித்துள்ளனர்.
தற்போது பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் ஏறக்குறைய 75 மொட்டு பாராளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவை அவர்கள் பெற்றுள்ளதாகவும் அந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ரணில் விக்கிரமசிங்கவின் தேர்தல் பிரசாரத்தை நடைமுறைப்படுத்துவதற்கு தேவையான நிறுவன நடவடிக்கைகளை மாவட்ட மட்டத்தில் அந்த சபை உறுப்பினர்களை தொடர்பு கொண்டு, அந்தந்த மாவட்ட உள்ளூராட்சி தலைவர்கள் மற்றும் சபை உறுப்பினர்களை தொடர்பு கொண்டு முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் மேலும் தெரிவிக்கின்றன.