SJB யுடன் 35 பாராளுமன்ற உறுப்பினர்கள் இணையவுள்ளனர்.
பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து அரசியல் கட்சிகளும் அதிக பிரதிநிதித்துவத்துடன் கூட்டணி அமைக்க தயாராக இருப்பதாக SJB தெரிவித்துள்ளது.
புதிய கூட்டணி அடுத்த பொதுத் தேர்தலில் போட்டியிடும் என அக்கட்சியின் செயலாளர் நாயகம் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் மத்தும பண்டார குறிப்பிடுகின்றார்.
எதிர்வரும் எட்டாம் திகதி புதிய கூட்டணியை வெளியிடவுள்ளதாக தெரிவித்த அவர், அதற்காக ஏனைய கட்சிகளை சேர்ந்த முப்பத்தைந்துக்கும் மேற்பட்ட எம்.பி.க்கள் இணையவுள்ளதாகவும் தெரிவித்தார்.
கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இந்தக் கருத்துக்களை வெளியிட்டார்.