முஜிபுருக்கு , ரணில் சொன்ன அறிவுரை : பதிலுக்கு “இவர்தான் ஆள் ” என சொன்ன முஜிபுர்.
இது போன வருட தொடக்கத்தில் உள்ளாட்சித் தேர்தல் அறிவிக்கப்பட்ட கால கதை.
உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் ஏற்கப்படும் திகதி அறிவிக்கப்பட்டதையடுத்து, SJB நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான், தனது எம்பி பதவியை இராஜினாமா செய்துவிட்டு கொழும்பு மாநகர மேயர் பதவிக்கு போட்டியிடப் போவதாக வதந்தி பரவியது.
அப்போது, ஒருநாள் நாடாளுமன்றத்துக்கு வந்த ஜனாதிபதி ரணில், முஜிபூரை நாடாளுமன்ற வளாகத்தில் சந்தித்தார். அங்கு SJB நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். எம். மரிக்காரும் இருந்தார்.
ஜனாதிபதி ரணில், கதையோடு கதையாக முஜிபுரிடம் கூறினார், “முஜிபுர் பாராளுமன்றத்திலிருந்து விலகப் போவதாக செய்திகள் உள்ளன. அந்த முடிவை எடுப்பதற்கு முன் இருமுறை யோசியுங்கள் என்றார். அந்தக் கதையை பெரிதாகக் கணக்கெடுக்காமல் சிரித்துக் கொண்டிருந்தார் முஜிபுர்.
சில நாட்களுக்குப் பிறகு, முஜிபூர் ராஜினாமா செய்து கொழும்பு மாநகரசபைக்கு நியமிக்கப்பட்டார். அரசாங்கம் வாக்கெடுப்பை நடத்தாமல் தேர்தலை ஒத்திவைத்தது. இன்றும் அந்த தேர்தல் நடக்கவில்லை. முஜிபுர் பாராளுமன்ற உறுப்பினரும் இல்லை. முஜிபருக்கு பதிலாக SJB கொழும்பு பட்டியலில் இருந்து பாராளுமன்றத்திற்கு வந்த ஏ. எச். எம். ஃபௌசி அரசாங்கத்தில் இணைந்தார். அந்த எம்பி சீட் கூட SJBயிடம் இல்லை.
சில மாதங்களுக்குப் பின்னர் கொழும்பில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் ஜனாதிபதி ரணில் மீண்டும் முஜிபுரைச் சந்தித்தார். அங்கு முஜிபூரிடம் ரணில், “நான் சொன்னதை, நீங்கள் கேட்கவில்லை…” என்றாராம்.
முஜிபுர் “இவர்தான் ஆள் ” என அங்கிருந்து நகர்ந்தாராம்.