குதிரையுடன் படம் எடுக்க சென்ற பெண்ணை மன்னரின் குதிரை கடித்தது (Video)

லண்டனில் மன்னரின் காவல் குதிரையுடன் படம் பிடிக்கச் சென்ற சுற்றுப்பயணியைக் குதிரை கடித்தது.
அதன் பிறகு அதிர்ச்சியில் அந்தப் பெண் மயங்கினார்.
சம்பவம் குறித்தக் காணொளி இணையத்தில் பரவலாகப் பகிரப்படுகிறது.
மத்திய லண்டனின் அருங்காட்சியகத்துக்கு வெளியே நின்றுகொண்டிருந்த குதிரையுடன் படம் எடுத்துக்கொள்ளப் பலர் வரிசையில் நின்றுகொண்டிருந்தனர்.
அந்தப் பெண் சுற்றுப்பயணி குதிரையுடன் படம் எடுக்க அதன் அருகில் நின்றபோது அது எதிர்பாராமல் அவரின் கையைக் கடித்தது.
வலியில் பெண் அலறிக்கொண்டே அங்கிருந்து கிளம்பும் காட்சி காணொளியில் தெரிகிறது.
அவருடன் அங்கு வந்திருந்தவர்கள் அவருக்கு ஏற்பட்டக் காயத்தைப் பரிசோதித்து அதைச் சுத்தம் செய்தனர்.
மற்றொரு காணொளியில் அந்தப் பெண் தரையில் மயங்கிக் கிடக்கும் காட்சி தெரிகிறது.
காவல் குதிரைகளுக்கு அருகில் குதிரைகள் உதைக்கலாம் அல்லது கடிக்கலாம் என்ற எச்சரிக்கைக் குறிப்பு உள்ளது. இருந்தும் சுற்றுப்பயணிகள் குதிரைகளுடன் படம் எடுக்க விரும்புகின்றனர்.