Tesla-வில் இயந்திர மனிதக் கருவிகள் : இலோன் மஸ்க் அறிவிப்பு.
மின் வாகனங்களைத் தயாரிக்கும் Tesla நிறுவனம் இயந்திர மனிதக் கருவிகளைத் தயாரிக்கப் போவதாய் அந்நிறுவனத்தின் உரிமையாளர் இலோன் மஸ்க் (Elon Musk) அறிவித்துள்ளார்.
கருவிகளைத் தயாரிப்பதோடு அவற்றை நிறுவனம் பயன்படுத்தவிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
அடுத்த ஆண்டு (2025) முதல் அந்த நடவடிக்கை தொடங்கும்.
திரு மஸ்க் தம்முடைய X பக்கத்தில் அதைப் பற்றிக் குறிப்பிட்டார்.
இயந்திர மனிதக் கருவிகளை 2026ஆம் ஆண்டு முதல் மற்ற நிறுவனங்களிடம் விற்பனை செய்யத் திட்டங்கள் உள்ளன.
Optimus என்றழைக்கப்படும் அந்த இயந்திர மனிதக் கருவி Tesla உற்பத்தி ஆலைகளில் இந்த ஆண்டு இறுதிக்குள் இடம்பெறும் என்று மஸ்க் முன்பு குறிப்பிட்டிருந்தார்.