வேலைகளை உருவாக்க இந்தியா $24 பில்லியனை ஒதுக்கும்.
இந்தியாவில் வேலை உருவாக்கத்திற்காக அடுத்த ஐந்தாண்டில் 24 பில்லியன் டாலரை அந்நாட்டு அரசாங்கம் ஒதுக்கியிருக்கிறது.
திரு நரேந்திர மோடி மீண்டும் பிரதமராகப் பதவியேற்ற பின் வெளியிடப்பட்ட முதல் வரவுசெலவுத் திட்டத்தில் அந்த அறிவிப்பு வந்தது.
வேலை உருவாக்கத்துடன் நாட்டில் வரிசெலுத்தும் நடுத்தர வர்க்கத்திற்கு ஆதரவு வழங்குவதிலும் இவ்வாண்டு வரவு செலவுத் திட்டம் கவனம் செலுத்தும்.
வளர்ச்சியை மேம்படுத்திக் கூடுதல் வேலைகளை உருவாக்க உள்கட்டமைப்பில் 133 பில்லியன் டாலர் இந்த நிதியாண்டில் முதலீடு செய்யப்படும்.