நவ சமசமாஜக் கட்சியின் ஸ்தாபகரும் தலைவருமான விக்கிரமபாகு கருணாரத்ன காலமானார்.
இலங்கையின் இடதுசாரி அரசியலின் முக்கிய தலைவராகவும், நவ சமசமாஜக் கட்சியின் ஸ்தாபகரும் தலைவருமான கலாநிதி விக்கிரமபாகு கருணாரத்ன அவர்கள் தனது 81 வயதில் காலமானார்.
நாட்டின் இனப்பிரச்சனைக்கு அரசியலமைப்பு ஊடாக தமிழர்களுக்கு தீர்வு எட்டப்பட வேண்டும் என குரல் கொடுத்துவந்த இவர், தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை, இராணுவ கையிருப்பில் உள்ள நிலங்களை மக்களுக்கு மீள கையளித்தல் உள்ளிட்ட விடயங்களுக்காகவும் தமிழர் நலன் சார்ந்து குரல் கொடுத்திருந்தார்.
அன்னாரின் இழப்பு, ஜனநாயக அரசியலின் பேரிழப்பாகும்.
மிக மோசமான காலமாக இருந்த 2015ம் ஆண்டு அவசர ஜனாதிபதி தேர்தல் குறித்து விக்கிரமபாகு கருணாரத்னவுடன் 2014 .11.30ம் திகதி சுவிஸ் வானோலிக்காக எடுக்கப்பட்ட பேட்டி