தேஷ்பந்துதான் பொலிஸ் மா அதிபர் .. நீதிமன்ற உத்தரவு செல்லாது.. பிரதமரின் விசேட அறிக்கை.
பொலிஸ் மா அதிபர் பதவியை இடைநிறுத்துவதற்கு நீதிமன்றத்திற்கு அதிகாரம் இல்லை என பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.
இதன்படி, பொலிஸ் மா அதிபராக தேசபந்து தென்னகோன் மாத்திரமே தொடர்ந்தும் செயற்படுவார் என அவர் தெரிவித்துள்ளார்.
பணிகளை மேற்பார்வையிட புதிய பொலிஸ் மா அதிபரை நியமிக்குமாறு ஜனாதிபதிக்கு உத்தரவிடுவதற்கு எவ்வித சட்ட ஏற்பாடுகளும் இல்லை என பிரதமர் தெரிவித்துள்ளார்.
பொலிஸ் மா அதிபர் பதவி வெற்றிடமாக இல்லாத பின்னணியில் புதிய பொலிஸ் மா அதிபரை நியமிக்கும் தகுதி ஜனாதிபதிக்கு இல்லை என்றும் அவர் கூறுகிறார்.
பாராளுமன்றத்தில் இன்று விசேட செவ்வி ஒன்றின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
பாராளுமன்ற விவகாரங்களில் தலையிடவோ, உத்தரவு பிறப்பிக்கவோ நீதிமன்றத்திற்கு அதிகாரம் இல்லை எனவும் , பொலிஸ் மா அதிபர் நியமனம் தொடர்பில் நீதிமன்றம் பிறப்பித்துள்ள தடை உத்தரவு செல்லுபடியாகாது எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.