பொலிஸ் மா அதிபர் விடயத்தில் ஜனாதிபதிக்கும் , எனக்கும் எதுவும் செய்ய முடியாது – சபாநாயகர் (Video)
பொலிஸ் மா அதிபராக தேஷ்பந்து தென்னகோனின் பெயரை அரசியலமைப்பு சபை அங்கீகரித்ததில் எந்த தவறும் இல்லை என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.
அவ்வாறு நியமிக்கப்பட்ட ஒருவர் அந்தப் பதவியில் இருந்து நீக்கப்பட்டால், அதுதொடர்பான முறையான நடைமுறை உள்ளது என்றும் அவர் கூறுகிறார்.
நிறைவேற்று அதிகாரிகளின் சிபாரிசுகளின் பேரில் நியமிக்கப்பட்ட ஒருவரை அரசியலமைப்புச் சபையில் இருந்து நீக்குவதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், தேர்தல் சூழ்நிலையில் பொலிஸ் மா அதிபர் நியமனம் தொடர்பில் எதுவும் செய்ய முடியாத நிலைக்கு ஜனாதிபதி வந்துள்ளதாகவும், அவரும் முன்பு இருந்த நிலையிலேயே இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
இதன்படி, பொலிஸ் மா அதிபர் நியமனம் தொடர்பில் எந்தவொரு நபரும் நீதிமன்றத்திற்குச் சென்று மீள் விசாரணைகளை மேற்கொள்ள முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
தேசபந்து தென்னகோனின் பொலிஸ் மா அதிபர் பதவியை இடைநிறுத்தி, பதில் பொலிஸ் மா அதிபர் ஒருவரை நியமிக்க உச்ச நீதிமன்றம் வழங்கிய உத்தரவு தொடர்பில் சபாநாயகர் இன்று பாராளுமன்றத்தில் விசேட அறிக்கையொன்றை வெளியிட்டார்.