பிலிப்பீன்ஸில் மூழ்கிய கப்பல் ஊழியர்களில் ஒருவரைக் காணவில்லை.
பிலிப்பீன்ஸ் கப்பல் ஒன்று மணிலாவுக்கு அப்பால் மூழ்கியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்தக் கப்பலில் சுமார் 1.5 மில்லியன் லிட்டர் தொழில்துறை எரிபொருள் எண்ணெய் இருந்ததாக அதிகாரிகள் கூறினர்.
சில கிலோமீட்டர் தொலைவுக்கு எண்ணெய்க் கசிவு ஏற்பட்டிருப்பதாய் அவர்கள் கூறினர்.
“MT Terra Nova” எனும் கப்பல் அதிகாலையில் மத்திய நகரான Iloilo நோக்கிச் சென்றுகொண்டிருந்தபோது சம்பவம் ஏற்பட்டது.
கடுமையான காற்றும் உயரமான அலைகளும் உதவி நடவடிக்கைகளுக்கு இடையூறாய் உள்ளதாகப் போக்குவரத்து அமைச்சர் ஜேமி பட்டீஸ்டா (Jaime Bautista) கூறினார்.
கப்பலின் 17 ஊழியர்களில் 16 பேரை மீட்டிருப்பதாக அவர் கூறினார்.
ஊழியர்களில் நால்வருக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.
விசாரணை நடைபெறுகிறது.