பாரிஸ் 2024 ஒலிம்பிக் கிராமம் (Video)
ஒலிம்பிக் போட்டிகள் இன்று (26 ஜூலை) தொடங்கவிருக்கின்றன.
அடுத்த 16 நாளுக்கு 14,250 விளையாட்டு வீரர்கள் போட்டியில் கலந்துகொள்ளவிருக்கின்றனர்.
அவர்களுக்காகவே சிறப்புக் கிராமம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.
அது குறித்துச் சில சுவைத் தகவல்கள்…
ஒலிம்பிக் கிராமம் என்றால்?
14,250 விளையாட்டு வீரர்கள், அவர்களின் பயிற்றுவிப்பாளர்கள், விளையாட்டு அதிகாரிகள் ஆகியோர் விளையாட்டுகள் முடியும்வரை ஒலிம்பிக் கிராமத்தில் தங்குவதற்காக உருவாக்கப்பட்ட வளாகம், ‘ஒலிம்பிக் கிராமம்’.
ஒலிம்பிக் கிராமம் எங்கு அமைக்கப்பட்டுள்ளது?
‘ஒலிம்பிக் கிராமம்’ பாரிஸின் செயின்ட்-ஊவன், செயின்ட்-டெனி, எல்-லெ-செயின்ட்-டெனி ஆகிய 3 பகுதிகளில் கட்டப்பட்டுள்ளது.
அதன் பரப்பளவு சுமார் 330,000 சதுர மீட்டர்.
தங்குமிடம் எப்படி உள்ளது?
அட்டைப் பெட்டியால் செய்யப்பட்ட படுக்கைகள் இங்கிருக்கின்றன. அவற்றைப் பற்றி அண்மையில் விளையாட்டு வீரர்கள் TikTokஇல் பகிர்ந்துள்ளனர்.
ஒலிம்பிக் போட்டிகள் முடிந்ததும் ஒலிம்பிக் கிராமத்திற்கு என்னவாகும்?
ஒலிம்பிக் கிராமத்தைக் கட்டுவதற்கான நேரத்தையும் பணத்தையும் கருத்தில்கொண்டு அதனைத் தொடர்ந்து பயன்படுத்த நகரங்கள் திட்டமிடுகின்றன.
விளையாட்டுகள் நிறைவடைந்ததும் சுமார் 6,000 பேர் பாரிஸின் கிராமத்தில் குடியிருக்கலாம் என்றும் சுமார் 6,000 பேர் பணியில் அமர்த்தப்படுவர் என்றும் ஒலிம்பிக் இணையப்பக்கத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.
அங்குக் கடைகள், வேலையிடங்கள், பொது வசதிகள், பசுமை சார்ந்த இடங்கள் முதலியவற்றை எதிர்பார்க்கலாம்.