ஜனாதிபதி தேர்தலில் மொட்டு ஆதரவு குறித்து ரணில் – பசில் இறுதிப் பேச்சு
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகர் பசில் ராஜபக்ஷவிற்கும் இடையில் முக்கிய கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.
ஜனாதிபதி வேட்புமனு மற்றும் உருவாக்கப்படவுள்ள கூட்டணி தொடர்பில் நீண்ட நேரம் கலந்துரையாடப்பட்டுள்ளது.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கு உள்ளூராட்சி நிறுவனங்களுக்கு முப்பது சதவீதமும், மாகாண சபைகளுக்கு முப்பத்தைந்து சதவீதமும், பாராளுமன்றத்திற்கு நாற்பது சதவீதமும் ஒதுக்கீடு செய்வதாக ஜனாதிபதி இங்கு அறிவித்துள்ளார்.
ஆனால் உள்ளூராட்சி நிறுவனங்களுக்கு தொண்ணூறு வீதமும், பாராளுமன்றத்திற்கு எழுபது வீதமும், மாகாண சபைகளுக்கு எழுபது வீதமும் பசில் ராஜபக்ச கோரியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இதன்படி, இந்த கலந்துரையாடல் தீர்வு ஏதுமின்றி முடிவடைந்ததோடு, ஜனாதிபதி மற்றும் திரு பசில் ராஜபக்ஷவுக்கும் இடையிலான கலந்துரையாடல் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை மீண்டும் நடைபெறவுள்ளது.