மொட்டு வேட்பாளர் தம்மிக்க பெரேரா.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) தனது ஜனாதிபதி வேட்பாளராக தொழிலதிபர் தம்மிக்க பெரேராவை நிறுத்த தீர்மானித்துள்ளதாக கட்சியின் உள்ளக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
திங்கட்கிழமை மொட்டு பொலிட்பீரோ கூட்டத்தின் பின்னர் தம்மக பெரேரா தனது வேட்புமனுவை உத்தியோகபூர்வமாக அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த செவ்வாய்கிழமை இடம்பெற்ற கலந்துரையாடலில் தம்மிக்க பெரேராவை ஜனாதிபதி வேட்பாளராக நியமிக்கும் தீர்மானத்தை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அவருக்கு உத்தியோகபூர்வமாக அறிவித்தது.
தற்போதைய தேர்தல் நிலவரங்கள் மற்றும் ரணில் விக்கிரமசிங்கவுக்கு மக்கள் மத்தியில் உள்ள ஆதரவு நிலவரங்களை ஆராய்ந்த பின்னர் தம்மிக்க பெரேராவே வேட்பாளராக இருக்க வேண்டும் என பசில் ராஜபக்ச தலைமையிலான குழுவினர் முடிவு செய்ததாக வட்டாரங்கள் தெரிவித்தன.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கொள்கைகளை ரணில் விக்கிரமசிங்க ஏற்றுக்கொள்வது நிச்சயமற்றது என்றும் அது கட்சியின் எதிர்காலத்திற்கு பாதகமான பாதிப்பை ஏற்படுத்தலாம் என்றும் பொஹொட்டுவேயில் உள்ள பசில் ராஜபக்ச தலைமையிலான குழுவினர் முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் சகோதரரான சன்ன விக்கிரமசிங்க, சுயேச்சை வேட்பாளராக போட்டியிடும் ஜனாதிபதிக்கான பிணைப் பணத்தை வைப்பிலிட்டுள்ளார். இருந்த போதிலும் ஜனாதிபதி விக்ரமசிங்கவும் பசில் ராஜபக்ஷவும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவிற்குள் ஆதரவைப் பெற்றுக்கொள்ள பல கலந்துரையாடல்களில் ஈடுபட்டுள்ளனர்.