சாகல சுசில் பிரேம்ஜயந்த இன்று மஹிந்தவை சந்தித்தனர்… ரணில் நேற்று பசிலுடன் கலந்துரையாடினார்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை அவரது விஜேராம உத்தியோகபூர்வ இல்லத்தில் இன்று (27) சந்தித்ததாக பொதுஜன பெரமுனவின் உள்ளகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தற்போது சுயேட்சை வேட்பாளராக போட்டியிட தயாராகி வரும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு ஜனாதிபதி தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனின் ஆதரவை வழங்குவது குறித்து கலந்துரையாடப்பட்டதாக அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
எதிர்வரும் திங்கட்கிழமை பொலிட்பீரோவுடன் கலந்துரையாடி தனது முடிவை அறிவிப்பதாக மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பசில் ராஜபக்ச மற்றும் ரணில் விக்கிரமசிங்க ஆகியோருக்கு இடையில் நேற்று கலந்துரையாடல் இடம்பெற்றதாகவும், ஜனாதிபதி வேட்பாளர் மற்றும் உருவாக்கப்படும் கூட்டணி தொடர்பில் இதன் மற்றுமொரு சுற்று கலந்துரையாடல் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை இடம்பெறவுள்ளதாகவும் பொஹொட்டுவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.