பொய்யான போதைப்பொருள் வழக்குகளில் சிக்க வைப்பதாக பொலிஸ் ஆணைக்குழுவிடம் முறைப்பாடுகள்!

போதைப்பொருள் அல்லது கஞ்சா போதைப் பொருள்களை வைத்து பொலிஸாரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டு தண்டனை விதிக்கப்பட்டதாக கூறப்படும் பலரின் எழுத்துப்பூர்வ முறைப்பாடுகள் பொலிஸ் ஆணைக்குழுவின் பொதுத் திணைக்களத்தில் நிறைந்துள்ளதாக பொலிஸ் ஆணைக்குழுவின் உள்ளக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

பொலிஸ் ஆணைக்குழுவிற்கு நாளாந்தம் வரும் முறைப்பாடுகள் தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்பட்டு இந்த முறைப்பாடுகளுக்கும் போலீஸ் மீது கடமையின் அழுத்தத்தினால் இவ்வாறான பொய்யான மனிதாபிமானக் குற்றங்கள் இடம்பெறுகின்றன என்ற பொதுவான கருத்துக்களுக்கும் தொடர்பு உள்ளதா என ஆராய்வதாக அந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்த முறைப்பாடு செய்தவர்கள் அனைவரும் நீதிமன்றத்திற்கு கொண்டு வரப்பட்டு குற்றவாளிகள் என தீர்ப்பளிக்கப்பட்டுள்ள நிலையில், அந்த நிலைமைகள் தொடர்பில் பொலிஸ் ஆணைக்குழு தற்போது சட்டத்தை ஆராய்ந்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

Leave A Reply

Your email address will not be published.