அடுத்தவாரம் இரண்டு மூன்றாக சிதறும் மொட்டு !
அடுத்த வாரத்துக்குள் மொட்டு தீர்க்கமாக உடைந்து விடும் என அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மொட்டு அமைச்சரவை மற்றும் இராஜாங்க அமைச்சர்கள் உட்பட 30 பேர் கொண்ட குழு கடந்த வாரம் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்து எதிர்வரும் தேர்தலில் ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவளிக்கவுள்ளதாக தெரிவித்ததாக மொட்டு உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தற்போதைய வேட்பாளரை வைத்து தேர்தலில் வெற்றியீட்டுவதில் உள்ள சவால்களை நாடாளுமன்ற உறுப்பினர் நிமல் லான்சா தலைமையிலான குழுவினர் வலியுறுத்தியுள்ளதாக தெரியவருகிறது.
மேலும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் 12 மாவட்டத் தலைவர்கள் ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவைத் தெரிவித்துள்ளனர், இதனால் அவர்களின் ஆதரவு கட்சியின் வாக்காளர் அடித்தளத்தை கணிசமாக பாதிக்கும் எனத் தெரிவிக்கப்படுகிறது.
இதன்படி, தம்மிக பெரேரா மற்றும் ஜனாதிபதி விக்ரமசிங்க ஆகியோருக்கு ஆதரவாக இரண்டு குழுக்கள் அமைப்பது இரு கட்சிகளின் வெற்றிக்கு இடையூறாக அமையும் எனவும், அதேவேளை, பிரதான எதிர்க்கட்சியான SJBயும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்களை தமது பக்கம் இழுக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாகவும் அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.