ஜனாதிபதி தேர்தலில் மொட்டு எடுத்துள்ள தீர்மானம்
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் வேட்பாளரை நிறுத்தக்கூடாது என்ற போக்கு அக்கட்சியின் உயர்மட்டத்தில் காணப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதன்படி ஜனாதிபதித் தேர்தலில் கட்சியின் அமைச்சர்கள் மற்றும் உறுப்பினர்கள் தங்களுக்கு விருப்பமான முடிவை எடுக்க அனுமதிக்கப்பட உள்ளனர்.
ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்பாளர் ஒருவரை மொட்டு முன்னிறுத்தமாட்டாது. அதன்படி தம்மிக்க பெரேரா அல்லது வேறு எந்த வேட்பாளரும் பரிந்துரைக்கப்பட மாட்டார்கள்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் ஏற்பட்டுள்ள பாரிய பிளவைத் தவிர்ப்பதற்கு பொருத்தமான தீர்வாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், அடுத்த நாடாளுமன்றத் தேர்தலில் பொதுஜன பெரமுன தனிக் கட்சியாகவோ அல்லது கூட்டணியாகவோ போட்டியிடுவது குறித்தும் அவர்களது கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான கட்சியின் நிலைப்பாட்டை எதிர்வரும் திங்கட்கிழமை மஹிந்த ராஜபக்ஷ அறிவிக்க உள்ளார்.