வெற்றிகரமாக நிறைவுகண்ட 13வது இரத்ததான முகாம்.

50 குருதிக்கொடையாளர்களுடன் வெற்றிகரமாக நிறைவுகண்ட 13வது இரத்ததான முகாம்.
கருகம்பனை தமிழ் மன்றம் சனசமூக நிலையம் இந்து இளைஞர் கழகம் இந்து இளைஞர் விளையாட்டுக்கழகம் ஆகியன இணைந்து நடாத்திய 13வது இரத்ததான முகாமிலே 50 தன்னார்வ குருதிக்கொடையாளர்கள் குருதிக்கொடை செய்திருந்தனர்.

இந்நிகழ்வில் பொலிஸ் உத்தியோகத்தர்கள், பெண்கள், இளைஞர்கள், போன்ற பலர் கலந்திருந்தனர். இந்நிகழ்விற்கு பூரண அனுசரணை வழங்கிய சங்கானை லயன்ஸ் கழகத்தினருக்கும் வருகை தந்த குருதிக்கொடையாளர்களுக்கும் தெல்லிப்பழை இரத்தவங்கியினருக்கும் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றனர்.

