யாழில் ஒரே நாளில் 42 இந்திய மீனவர்களின் வழக்குகள் விசாரணைக்கு!

யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள 42 இந்திய மீனவர்களின் வழக்குகள் நாளைமறுதினம் திங்கட்கிழமை (29) ஊர்காவற்றுறை நீதிவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளன.
இலங்கைக் கடற்பரப்புக்குள் எல்லை தாண்டி மீன்பிடியில் ஈடுபட்ட சமயம் பல்வேறு தினங்களில் கைதான 42 இந்திய மீனவர்களின் வழக்குகளே நாளைமறுதினம் விசாரணைக்கு வருகின்றன.
இதில் ஜூலை 1ஆம் திகதி 4 நாட்டுப் படகுகளில் எல்லை தாண்டிய 25 மீனவர்களும், ஜூன் 16 ஆம் திகதி ஒரு படகில் எல்லை தாண்டிய 4 மீனவர்களும், ஜூலை 11 ஆம் திகதி 3 படகுகளில் எல்லை தாண்டிய 13 இந்திய மீனவர்களும் என மொத்தம் 42 இந்திய மீனவர்களின் வழக்குகள் நாளைமறுதினம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளன.
இதேவேளை, ஜூன் 22ஆம் திகதி கைதான மேலும் 22 இந்திய மீனவர்களின் வழக்கு எதிர்வரும் செவ்வாய்க்கிழமை இதே நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகின்றது.
யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் தற்போது 74 இந்திய மீனவர்கள் விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.