சிங்களவர்களின் வாக்குகளை மட்டும் வைத்து திசைகாட்டி அரசாங்கத்தை அமைத்தாலும் பயனில்லை – அனுர திஸாநாயக்க.
தேசிய மக்கள் சக்தி அதிகாரத்தைப் பெறுவதற்கு சிங்கள மக்களின் வாக்குகள் மாத்திரம் போதுமானதாக இருந்தாலும், அப்படி வெற்றியீட்டுவதில் அர்த்தமில்லை என அக்கட்சியின் தலைவர் அனுர திஸாநாயக்க குறிப்பிடுகின்றார்.
சிங்கள மக்களின் வாக்குகளால் வெற்றி பெற்றால் மட்டும் போதாது, பெரும்பான்மையான தமிழ் முஸ்லிம் சிங்கள மக்களின் நம்பிக்கையைப் பெற்ற ஆட்சியொன்றை நிறுவவே தமது கட்சி விரும்புவதாகவும் அவர் தெரிவித்தார்.
வாக்குக்காகக் காத்திருக்காமல் நாட்டைக் கட்டியெழுப்பவே கட்சியாக அரசியல் செய்வதாக அவர் கூறுகிறார்.
காலியில் நடைபெற்ற தேசிய மக்கள் சக்தியின் பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்