வடகிழக்கு இளையோர் மீனவர் கூட்டு யாழில் சந்திப்பு.

வடகிழக்கு இளையோர் மீனவர் கூட்டு என்ற புதிய ஒரு அமைப்பு யாழ்ப்பாணத்தில் இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
சிவில் சமூக பொருளாதார அபிவிருத்தி மையத்தின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணத்தில் உள்ள அரச சார்பற்ற நிறுவனமொன்றில் இந்தக் கலந்துரையாடல் இன்று இடம்பெற்றது.
குறித்த கலந்துரையாடலில் வடக்கு, கிழக்கு சார்ந்த ஏழு மாவட்டங்களில் உள்ள இளம் மீனவர்கள் மற்றும் மீனவ அமைப்புக்களின் பிரதிநிதிகளும் பங்பற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.