கட்சியை உடைப்பவர் ரணில் – சட்டத்தரணி சந்திரசிறி செனவிரத்ன
ரணில் கட்சிகளை உடைக்கிறார் என்று நாமல் ராஜபக்ச கூறிய பதிவை எனக்கு அனுப்பிய நண்பர் ஒருவர் என்னிடம் என்ன நினைக்கிறீர்கள் என்று கேட்டார்.
நாமலின் குற்றச்சாட்டு கட்சி அரசியலின் பண்பாகும், அது ரணிலின் கண்டுபிடிப்பு அல்ல.
1935 இல் இலங்கையில் நிறுவப்பட்ட சமசமாஜக் கட்சியின் முன்னோடியான பிலிப் லெஸ்லி , என்.எம்.கொல்வினைக் கூட உதாரணமாகக் கூறலாம்.
நாமலின் அப்பா மகிந்தவின் சலூன் கதவுகள் திறந்துள்ளதாக ஆட்களை எடுத்ததும் கட்சிகளை உடைத்த விளையாட்டுதான்.
1951 இல் மகிந்தவின் அப்பா டி.ஏ. ராஜபக்ஷ ஐ.தே.க.வை உடைத்து பண்டாரநாயக்காவை பின்பற்றி சென்று சலூன் கதவுகள் என்ற பெயரில் செய்த அந்த தேசப்பற்றற்ற வேலையை மஹிந்த ராஜபக்ஷவும் தொடர்ந்தார்.
எதிர்க்கட்சிகள் ரணில் ராஜபக்ச என அவதூறு கூறும்போது, நாமல் சொல்வது மோட்டு கதையாகும் .நாமலின் மன அழுத்தத்திற்கு காரணம் பொஹொட்டுவ சிரேஷ்டர்கள் நாமலுக்கு ஆதரவாக நிற்காதது ரணிலுக்காக அணிவகுத்ததுதான் .
தேசபிதா டி.எஸ். சேனநாயக்கவின் மூத்த மகன் டட்லி சேனநாயக்க , தந்தையின் மகன் என்று போற்றப்படுகிறார், ஆனால் நாமல் ராஜபக்ஷ, மெதமுலனவின் மூத்த மகனாக , தனது தந்தையின் அதிகாரத்தை பெறுவது எளிதாக இல்லை. காரணம், மக்கள் கொடுத்த அரசை வெற்றிலை பாக்கு வைத்து ரணிலுக்கு கையளித்தார்கள். ஆனால் ரணில் தேடிப் போய் பெறவில்லை. ரணில் நாட்டை ஆளவில்லையென்றால், நீண்டகாலமாக ராஜபக்ஷவின் மெதமுலனைவை வணங்கிய பொஹொட்டுவ இளம் எம்.பி.க்களான சியம்பலாபிட்டிய, சேமசிங்க, காஞ்சனா போன்றவர்களுக்கு ரணில் கொடுத்த பதவியை , ராஜபக்ச ஆட்சியில் ஒரு போதும் கிடைத்தே இருக்காது என நாட்டு மக்கள் கூறுகின்றனர்.
இலங்கையில் அதிபர் தேர்தலில் கொழும்பு, கம்பஹா, குருநாகல் ஆகிய நகரங்கள் முக்கியமானவை. வீரவன்சவை பலவீனப்படுத்த பசில் , சரத் வீரசேகரவை இறக்கியதால், கொழும்பில் மொட்டு பலமாக இல்லை. கம்பஹா அல்லது குருநாகல் மொட்டு சிரேஷ்டர்கள் மஹிந்தவுக்கு வழங்கிய ஆதரவை நாமலுக்கு வழங்கவில்லை என மத்தியதர வர்க்க ராஜபக்ச இளவரசர் கோபமடைந்துள்ளார்.
மகிந்தவை அரசனாக காட்டிய பிரசன்ன, நிமல் லான்சா போன்று குருநாகல் அனுர யாபாவும் நாட்டிற்கு ரணில் தேவை என்ற நிலையில் இருக்கின்றார்கள். பழைய ஐ.தே.க குருநாகல் ஜோன்ஸ்டன், பேசாது மௌனமாகிவிட்டார்.
இதற்கெல்லாம் மேலாக, தம்மிக பெரேராவின் பெயரை தேர்வு செய்தால், ராஜபக்சேவை மதித்து, கோட்டாவால் நடுத் தெருவுக்கு வந்தவர்கள், இன்னொரு நடுத்தர வர்க்க பருப்பை அரசனாக்குவதற்கு நாங்கள் மண்டை சுகுமில்லாதோர் இல்லை என ராஜபக்ச முகாமின் பெரும்பான்மையினர் முடிவு செய்துள்ளனர்.
உண்மையில் நடப்பது நாட்டின் எதிர்காலத்திற்காக நாட்டு மக்கள் ரணிலிடம் நெருங்கி வருவதே அன்றி ரணில் யாருடைய பாக்கெட்டிலும் கை வைக்கவில்லை. கோட்டா தப்பி ஓடுவதற்கு முன் பதவியை விட்டுவிட்டு வீட்டுக்குச் சென்றது, நாமலின் தந்தையான பிரதமர் மஹிந்த ராஜபக்ஷதான்.
கட்சிகளை பிளவுபடுத்துவது ரணிலின் பிறப்பு குணம் என குற்றம் சுமத்தும் நாமலுக்கு எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலின் கடுமை கூட புரியவில்லை. நாமல் ஏன் பிரதமர் பதவியை கேட்கிறார் என்பது முழு நாட்டிற்கும் தெரியும்.
நாட்டைச் சரிவரச் செய்ததன் மூலம் ராஜபக்ஷ குடும்பத்தையே 2020ம் ஆண்டு வீட்டுக்கு அனுப்பிய மக்கள் , ரணில் மீது தற்போது பலத்த நம்பிக்கை வைத்துள்ளதாக நாமல் வெறுப்புடன் வெடித்தாலும், பொஹொட்டுவவை சேர்ந்த பெரும்பான்மையினருக்கு பெருமையே தவிர வருத்தமில்லை.
மேற்குறிப்பிட்ட பொஹொட்டுவ சிரேஷ்ட அரசியல்வாதிகள் மட்டுமன்றி உள்ளூராட்சி சபைக்கு செல்லவிருக்கும் கிராமத்தின் பிரதிநிதிகளும் ஊர் பொது மக்களும் ரணிலுடன் இணைந்துள்ளனர். நாமல் ராஜபக்சவுக்கு தற்போதுள்ள மாறும் அரசியலுக்கும் , ரணில் என்ற காரணிக்கும் பொருந்தக்கூடிய அறிவும் உணர்வும் புரிந்திருந்தால் அவர் ரணிலிடம் பிரதமர் பதவியைக் கேட்டிருக்க மாட்டார்.
இரண்டு வருடங்களில் நாட்டின் பிரச்சினைகளில் ரணில் தலையிட்ட விதத்தின்படி, எதிர்வரும் காலங்களில் வேறு வழியே இல்லை என்பது நாட்டின் பெரும்பான்மையான மக்களின் கருத்தாகும். அது ரணில் விக்கிரமசிங்க நிச்சயமாக தேவைப்படுவதால் அல்ல. நாம் வாழ ஒரு நாடு வேண்டும் என்பதாலேயே அனேகர் ரணிலோடு நிற்கிறார்கள். இப்போது, ஷசீந்திர ராஜபக்ச கூட தனது சால்வையை தூக்கி எறிந்துவிட்டு டை கோட் அணிந்து வருகிறார், ஏனென்றால் மக்கள் மனதை நன்றாகப் படித்து விட்டார்.
பொசன் காலத்தில் எனது நண்பர் ஒருவர் ரம்பேவ உள்ளூராட்சி சபையில் பொஹொட்டுவ உறுப்பினர் ஒருவரை சந்தித்தார். எப்படி என்று கேட்டதற்கு, நாங்கள் ராஜபக்சேவை விட்டு விலக மாட்டோம் என்றார். தற்போதைய அரசியல் சூடு பற்றி பேசும் போது ஷெஹான் சேமசிங்க, எஸ்.எம்.சந்திரசேன ஆகியோருடன் இணைந்து ரணிலுக்கு ஆதரவளிக்க ராஜபக்ஷ ஆதரவு மக்கள் தீர்மானித்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். மற்றும் ராஜபக்சே…? என கேட்டபோது, இது ராஜபக்சேவின் காலம் இல்லை என உடைந்த குரலில் கூறினார். மகிந்த கேட்டாலும் கஷ்டம் என்று அவர் கூறியிருப்பதில் இருந்து பாரம்பரிய கண்டியின் புதிய அரசியல் நோக்குநிலையை புரிந்து கொள்ளலாம்.
மகிந்தானந்த, பிரசன்ன ரணதுங்க, காஞ்சன விஜேசேகர, ஷெஹான் சந்திரசேன போன்றவர்கள் அவர்களது தரத்தில் சிந்திக்கின்றனர். ரணிலுக்குக் தற்காலிகமாக ஜனாதிபதி பதவி கொடுக்கப்பட்டதால் தந்தைக்குப் பிறகு ரணில் தன்னிடம் நாட்டை ஒப்படைக்க வேண்டும் என குடும்ப சொத்து போல நாமல் ராஜபக்ச நினைக்கிறார்.
காஞ்சன, சேமசிங்க, சியம்பலாபிட்டிய ஆகிய மூவருக்கும் கடந்த இரண்டு வருடங்களில் தமது பலத்தை பயன்படுத்தி வேலை செய்வதற்கு கிடைத்தது போல ராஜபக்சவிடம் இருந்து ஒருபோதும் சந்தர்ப்பம் கிடைத்திருக்காது. அதை அவர்கள் உணருகிறார்கள்.
ஜனாதிபதி விக்கிரமசிங்கவின் எண்ணப்படி, கண்டி ஷெஹான் சேமசிங்க சர்வதேச நாணய நிதியத்துடன் பேசினார். எரிபொருள் நெருக்கடியை தெவிநுவர காஞ்சன விஜேசேகர நாட்டுக்காக பல இடர்களை தீர்த்தார். அந்த இளம் அரசியல்வாதிகளை நியமித்த வாக்காளர்களுக்குத் இவை தெரியும், ரணில் நாட்டை ஆளவில்லையென்றால், இந்த இளம் ஆற்றல் நாட்டின் நலனுக்காக பயன்படுத்தப்பட்டு இருக்காது என்பது. ரணில் ஜனாதிபதி ஆகாமல் இருந்திருந்தால் , இவர்கள் ராஜபக்ச வீட்டுக்கு வெற்றிலை , பாக்கு இடித்து கொடுத்து சாமரம் வீசிக் கொண்டிருந்திருப்பார்கள்.
ஏப்ரல் 2022 போராட்டத்தின் போது, நமாலின் தந்தை தப்பித்து போனது, சித்தப்பா பசில் தப்பி ஓடுவதற்கு முன்னராகும். ராஜபக்சே ஆதரவாளர்கள் போராட்ட மைதானத்திற்குள் புகுந்து தாக்குதல் நடத்தியதால்தான் மொட்டு சிதறியது.
மே 13 அன்று மகிந்தவும், கோட்டாவும் ஆட்சியிலிருந்து தூக்கி எறியப்பட்டபோது, ஜனநாயக நாட்டின் எதிர்க்கட்சித் தலைவர் நாட்டைக் கைப்பற்ற வேண்டியிருந்தது, அப்போது வீழ்ந்த ராஜபக்சவினரிடமிருந்து வீழ்ந்த நாட்டை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் அல்லது ஜே.வி.பி.யின் மூத்த தலைவர் அனுரகுமார பொறுப்பேற்றிருக்க வேண்டும், ஒரு எம்பி ஆசனத்திற்கு மட்டுப்படுத்தப்பட்ட ரணிலை அல்ல.
ஆனால் நாட்டு நிலவரப்படி சஜித்தும், அநுரவும் எவரோ ஒருவனுடைய பாவத்தை நாம் ஏன் சுமக்க வேண்டும் என பயத்தில் கைகழுவி ஒதுங்கினர். சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தனவை நாட்டின் ஜனாதிபதியாக வருமாறு அழுத்தம் கொடுக்கப்பட்ட போதிலும் அனுபவமிக்க மூத்த மனிதருக்கு நிலைமை நன்றாகவே தெரிந்திருந்தது.
நாடாளுமன்ற உறுப்பினர்கள் நிர்வாணமாக்கப்பட்டு அடித்துக் கொல்லப்படும் அளவுக்கு நிலைமை மோசமாகியது. ஜனாதிபதியின் சட்டத்தரணி சாலி பீரிஸ் ஜனாதிபதியாக வரும் அளவுக்கு நாட்டின் புத்திஜீவிகள் மிகவும் வெறிபிடித்து போய் இருந்தனர். அனுபவம் வாய்ந்த மகிந்த மற்றும் பொருளாதார மூளையான பசில் இருவரும் ஒளிந்து கொள்ள இடங்களைத் தேடிக் கொண்டிருந்தனர். ஆட்சிக்கு வந்து குறுகிய காலத்துக்குள் அழிந்து வரும் நாட்டை மீட்பதற்காக ஜனாதிபதி கோட்டாபயவினால் அழைப்பு விடுக்கப்பட்ட சர்வகட்சி மாநாட்டில் கலந்து கொண்ட தெற்கிலிருந்து சென்ற ஒரேயொரு எதிர்க்கட்சி அரசியல்வாதி ரணில் விக்கிரமசிங்க மட்டுமே.
மாநாட்டின் சில நிமிடங்களிலேயே ரணில் விக்கிரமசிங்கவிடம் பகிரங்கமாக மன்னிப்புக் கேட்கும் அளவிற்கு நாட்டின் நிறைவேற்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அனாதரவாக இருந்தார், மக்களால் வீட்டுக்கு அனுப்பப்பட்ட அரசியல்வாதி ரணில் விக்கிரமசிங்க ஒருவகையில் புத்திசாலி.
நிச்சயமாக மே 13 அன்று நாட்டின் பிரதமர் பதவியும், ஜூலை 13 அன்று நாட்டின் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையும் ரணில் விக்கிரமசிங்கவின் காலடியில் கொண்டு வரப்பட்டாலும், நிபந்தனைகளின் கீழ் ரணில் கேட்டது எதுவுமில்லை. ரணில் ஜனாதிபதியாகி இருபத்தி நான்கு மணித்தியாலங்களுக்குள் அனைவரின் அடாவடித்தனமும் முடிவுக்கு வந்தது. நிச்சயமாக ரணில் நாட்டின் பொருளாதாரத்தை மட்டும் கட்டியெழுப்பவில்லை. சட்டம் ஒழுங்கையும் நிலைநாட்டினார்.
இவ்வாறு தொகுக்கப்பட்ட சுதந்திர இலங்கையின் பெரும் அவலம், நாமல் ராஜபக்சவுக்கு நினைவில் இல்லை. இனி வரவிருக்கும் தேர்தலில் ஜனாதிபதியாக வரமுடியவில்லை என்றால் நாட்டின் பிரதமராகவோ அல்லது வேறு ஏதோவொன்றாகவோ மட்டுமே வர அவர் விரும்புகிறார்.
மலையாள திரைப்பட காட்சி ஒன்றில் ஒரு பகுதி இப்படி வருகிறது,
“உன் அப்பாவும் , என் அப்பாவும் இருவர். தயவு செய்து செல். நான் தெருவில் இறப்பதை விட சிறையில் இருப்பதையே விரும்புகிறேன். சேனலில் ஒளிபரப்பான மலையாளப் படத்தின் சம்பவம் இது. இதுவே மொட்டு பெரும்பான்மையினரின் மனநிலையாகும்.
_ சட்டத்தரணி சந்திரசிறி செனவிரத்ன