ரணில் கேட்டால் ஐயோ மறு கதையே இல்லாமல் கொடுப்பேன் – மஹிந்தவின் அட்டகாச பேச்சு.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு ஆதரவளிக்குமாறு கட்சி தன்னிடம் கேட்டால், ஐயோ மறு கதையே இல்லாமல் கொடுப்பேன் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
ஆனால் அதை கட்சிதான் தீர்மானிக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் இன்று அறிவிக்கப்படுவார் எனவும் அதுவரை பொறுமை காக்குமாறும் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
கட்சி உரிய முடிவை எடுக்கும் என்றார்.
ஊடகவியலாளர்கள் நேற்று (28) வினவிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.