ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிவுள்ள எனக்கு ஆதரவளிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன் என ரணில் மஹிந்தவுக்கு கடிதம்..
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தாம் சுயேட்சை வேட்பாளராக போட்டியிடவுள்ள நிலையில், தனக்கு ஆதரவளிக்குமாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவிடம் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கோரிக்கை விடுத்துள்ளார்.
பொதுஜன பெரமுனவின் தலைவர் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்து அவர் இந்த கோரிக்கையை விடுத்துள்ளார்.
இதன்படி, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் கோரிக்கை இன்று பிற்பகல் நடைபெறவுள்ள பொதுஜன பெரமுனவின் நிறைவேற்று சபையில் பரிசீலிக்கப்படவுள்ளது.