வேலை நிறுத்தம் செய்பவர்களுக்கு எங்கள் அரசு தீர்வு தரும்.. எனவே நாங்கள் வேலை நிறுத்தம் செய்யப் போவதில்லை : லால்காந்த.

இந்நாட்டு வரலாற்றில் முதன்முறையாக ஒடுக்கப்பட்டோரின் அரசாங்கம், வரலாற்றில் முதன்முறையாக அடுத்த மூன்று மாதங்களில் உருவாக்கப்படும் என செயற்குழு உறுப்பினர் தேசிய மக்கள் சக்தியின் கே.டி. லால்காந்த தெரிவித்தார்.

புதிய அரசாங்கத்தின் கீழ் தொழிற்சங்கப் பிரதிநிதிகளின் பிரச்சினைகள் தீர்க்கப்படும் என்பதால் எதிர்வரும் இரண்டு அல்லது மூன்று மாதங்களில் எந்தவொரு பணிப்பகிஷ்கரிப்பு நடவடிக்கையிலும் ஈடுபடப் போவதில்லை என தேசிய தொழிற்சங்க நிலையம் தீர்மானித்துள்ளதாகவும் அவர் கூறினார்.

ஒன்றிணைந்து நாட்டுக்கு மறுமலர்ச்சி என்ற தொனிப்பொருளில் கண்டி தபால் நிலைய கேட்போர் கூடத்தில் நடைபெற்ற கண்டி மாவட்ட முதியோர் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

Leave A Reply

Your email address will not be published.