ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் மக்கள் போராட்டக் கூட்டணியின் (அரகலய) வேட்பாளர் நுவான் போபகே
மக்கள் போராட்டக் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக சட்டத்தரணி நுவான் போபகே நியமிக்கப்பட்டுள்ளார்.
லஹிரு வீரசேகர கொழும்பு பொது நூலகத்தில் இன்று (29) விடுத்துள்ள விசேட அறிவித்தலில் இதனைத் தெரிவித்துள்ளார்.
இதன்போது, மக்கள் போராட்ட இயக்கத்தின் செயற்குழு உறுப்பினர்களான வசந்த முதலிகே, தரிந்து உடுவரகெதர, நூர் மொரீன், தர்மசிறி லங்காபேலி, மொஹமட் இஸ்ரி, தயாபால திராணகம, அஜந்த அலஹகோன், பி.டி. சரணபால, துமிந்த ராஜ்குமாரவிமார, துமிந்த நாகமுவ, ஜெயகுமார் , எஸ். ஜயகொட, ஜூட் நாமல் பெர்னாண்டோ, வி. மகேந்திரன், விஜேபால வீரகோன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
கொழும்பு கொலன்னாவ பிரதேசத்தில் வசிக்கும் நுவான் போபகே, டி.எஸ்.சேனநாயக்க கல்லூரி மற்றும் கொழும்பு சட்டக் கல்லூரி ஆகியவற்றில் தனது கல்வியை முடித்தார். சுப்ரீம் கோர்ட்டில் வழக்கறிஞராக பணியாற்றி, தற்போது மக்கள் போராட்ட இயக்கத்தின் செயற்குழு உறுப்பினராக உள்ளார்.