நெலும் மாவத்தை ஒற்றை இலக்கத்துக்கு இறங்கியது.. மொட்டு ரணிலின் பக்கம்
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் தற்போது ஏற்பட்டுள்ள பிளவு மிகவும் உக்கிரமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பொதுஜன பெரமுனவில் இருந்து தனி வேட்பாளரை முன்வைக்க வேண்டும் என்ற கருத்துக்கு ஆதரவாக இருக்கும் பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை ஒற்றை இலக்கமாக குறைந்துள்ளதாகவும் அறியமுடிகிறது.
இதுவரையில் தனிப்பட்ட கருத்தை தெரிவிக்காத, கட்சியின் கருத்தையும், உடன்பாட்டையும் எதிர்பார்க்கும் ஒரு மாகாண அமைச்சர், தனது மாவட்டத்தில் உள்ள உள்ளாட்சி பிரதிநிதிகளை அழைத்து கருத்து கேட்டபோது, அனைவரும் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவளிக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளனர்.
மாகாண அமைச்சர் வேறுவிதமாக முடிவெடுத்தால் அவரோடு வேலை செய்யத் தயாராக இல்லை என்றும் குறிப்பிட்டுள்ளனர்.
இதன்படி, இராஜாங்க அமைச்சரும் தனது பழைய நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டு ஜனாதிபதியுடன் செல்ல தீர்மானித்துள்ளார்.
தற்போதைய நிலவரத்தின் அடிப்படையில், இன்று பிற்பகல் நடைபெறவுள்ள பொதுஜன பெரமுனவின் நிறைவேற்று சபையில் வேட்பாளரை குறிப்பிடாமல் வேட்பாளரை மேலும் பரிசீலிக்க குழுவொன்று நியமிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன இன்னும் சில நாட்கள் தாமதிக்கத் தயாராக இருப்பதாக அதன் உள்ளகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.