திருமணத்துக்கு மகளைக் கட்டாயப்படுத்திய மாதுக்குச் சிறை (Video)
சிட்னி: ஆடவர் ஒருவரை திருமணம் செய்துகொள்ள தம் 21 வயது மகளுக்கு உத்தரவிட்டதற்காக, ஆஸ்திரேலியாவின் கட்டாயத் திருமணத்துக்கு எதிரான சட்டத்தின்கீழ் முதன்முறையாக மாது ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சிறிய அளவிலான தொகையைப் பெற்றுக்கொண்டதற்கு கைமாறாக, முகம்மது அலி ஹலிமி எனும் 26 வயது ஆடவரைத் திருமணம் செய்துகொள்ளும்படி 2019ல் தம் மகள் ரூக்கியா ஹைதாரியை சக்கீனா முகம்மது ஜான் கட்டாயப்படுத்திய குற்றம் நிரூபணமானது.
திருமணம் செய்துகொண்டு ஆறு வாரங்கள் கழித்து, ரூக்கியாவை ஹலிமி கொன்றுவிட்டார். அக்குற்றத்துக்காக அவர் ஆயுள் தண்டனையை அனுபவித்து வருகிறார்.
இந்நிலையில், குற்றத்தை ஒப்புக்கொள்ள மறுத்த சக்கீனாவுக்கு திங்கட்கிழமை (ஜூலை 29) குறைந்தது ஓராண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
ஆஸ்திரேலியாவில் கட்டாயத் திருமணத்துக்கு எதிரான சட்டம் 2013ல் அறிமுகப்படுத்தப்பட்டது. குற்றம் புரிவோருக்கு அதிகபட்சம் ஏழாண்டு சிறைத் தண்டனை விதிக்கப்படலாம்.