ரணிலுக்கு ஆதரவு இல்லை, தனி வேட்பாளரை களமிறக்கும் மொட்டு
ஜனாதிபதி வேட்பாளராக தமது கட்சியின் வேட்பாளரே முன்னிறுத்தப்பட வேண்டுமென மொட்டு கட்சி தீர்மானித்துள்ளது.
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆராய்வதற்காக இன்று பிற்பகல் கட்சி அரசியல் சபைக் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்த நிலையில், கட்சியின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் கொண்டு வந்துள்ள பிரேரணைக்கு மொட்டு கட்சி ஆதரவு தெரிவித்துள்ளது.
அரசாங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் 11 அமைச்சர்கள் தீர்மானத்திற்கு எதிராக வாக்களித்துள்ளனர்.
அக்கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் எதிர்வரும் நாட்களில் அறிவிக்கப்படுவார் என மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இல்லத்தில் இன்று (29) இடம்பெற்ற சந்திப்பின் பின்னரே இந்த விடயம் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இந்த சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம்,
இந்த தீர்மானத்தை எதிர்ப்பவர்கள் அல்லது கட்சியின் அங்கீகாரம் இன்றி ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவோர் இருந்தால் உடனடியாக அந்த நபருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.