மகிந்த வீட்டிலிருந்து , ரணிலின் வீட்டிற்கு சென்று ஆதரவளிப்பதாக உறுதியளித்த மொட்டு கட்சியினர்

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பல அரசியல் குழு உறுப்பினர்கள் தற்போது ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளனர்.
விஜயராமவில் அமைந்துள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இடம்பெற்ற அரசியல் பீட கலந்துரையாடலில் கலந்து கொண்ட பின்னர், குறித்த குழுவினர் ஜனாதிபதியின் இல்லத்திற்குச் சென்றுள்ளனர்.
அந்தக் கலந்துரையாடலில் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் கட்சியின் தீர்மானம் எதுவாக இருந்தாலும் ஜனாதிபதி ரணிலுக்கு ஆதரவளிப்பதாக உறுதியளித்துள்ளனர்.
இந்தக் குழுவில் சுமார் நாற்பது பேர் இருந்ததாக செய்தியாளர்கள் கூறுகின்றனர்.