அவிசாவளையில் நீரில் மூழ்கி சிறுவன் மரணம்!

நீரில் மூழ்கி 17 வயதுடைய சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இந்தப் பரிதாப சம்பவம் நேற்று மாலை அவிசாவளை, நாச்சிமலை நீரோடையின் கோனவல பகுதியில் இடம்பெற்றுள்ளது என்று அவிசாவளை பொலிஸார் தெரிவித்தனர்.
கஹதுடுவ, பொல்கஸ்ஹோவிட்ட பலகம பிரதேசத்தைச் சேர்ந்த சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
சிறுவனின் சடலம் பிரேத பரிசோதனைக்காக இரத்தினபுரி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.