வயநாட்டில் கடும் நிலச்சரிவு: மண்ணில் புதைந்த 100’க்கும் மேற்பட்டோர் – 20 உடல்கள் மீட்பு!!

கேரளா மாநிலம் வயநாட்டில் கனமழை காரணமாக, நிலச்சரிவு ஏற்பட்டு, 6 பேர் மரணமடைந்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.

கேரளாவின் வயநாடு மாவட்டத்தில் உள்ள மேப்பாடி அருகே சரிவான பகுதிகளில் ஏற்பட்ட எதிர்பாராத விதமான நிலச்சரிவில் தற்போது தகவலின் படி 6 பேர் உயிரிழந்துள்ளார்கள். மேலும், இந்த சம்பவத்தில் நூற்றுக்கணக்கானோர் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

தேடுதல் மற்றும் மீட்புப் பணிகளில் அனைத்து அரசு நிறுவனங்களும் ஈடுபட்டுள்ளதாக கேரள முதல்வர் பினராயி விஜயன் உறுதிப்படுத்தியுள்ளார். மேலும் மாநில அமைச்சர்களின் தலைமையில் நடவடிக்கைகள் ஒருங்கிணைக்கப்பட்டு மீட்பு நடவடிக்கைகளுக்கு தலைமை தாங்குவார்கள் என்று முதல்வர் விஜயன் தனது அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

வயநாடு மாவட்டத்தில் நிலச்சரிவு மற்றும் மழை தொடர்பான பிற பேரிடர்களை தொடர்பாக அடுத்து, சுகாதாரத் துறை — தேசிய சுகாதார இயக்கம் — கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொள்ளலாம் என்றும ஆர் அறிவித்தார். அதற்கான அவரச எண்ணகளும் அறிவிக்கப்பட்டுள்ளன – 9656938689, 8086010833 என இரண்டு எண்கள் இதற்காக அறிவிக்கப்பட்டுள்ளன.

கேரள மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் (KSDMA) பாதிக்கப்பட்ட பகுதிக்கு தீயணைப்பு மற்றும் NDRF குழுக்களை அனுப்பியுள்ளது. மேலும் NDRF குழு வயநாடு செல்லும் விரைந்துள்ளது. மேலும், கண்ணூர் பாதுகாப்புப் படையிலிருந்து இரண்டு குழுக்களும் வயநாட்டிற்கு அனுப்பப்பட்டுள்ளன.

கனமழை காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவில் இன்னும் பலர் சிக்கியிருப்பதாகவும், தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் மீட்புப் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.