‘மொட்டு’ தனிவழியில் சென்றாலும் ரணிலுக்கே பெரு வெற்றி! – ஐ.தே.க. திட்டவட்டம்.

“ஜனாதிபதித் தேர்தலில் மொட்டுக் கட்சி தனியாகச் சென்று வேட்பாளரைக் களமிறக்குவதால் சுயாதீன வேட்பாளரான தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாது. இந்தத் தேர்தலில் ரணில் விக்கிரமசிங்கவே மாபெரும் வெற்றியடைந்து ஜனாதிபதிப் பதவியைத் தொடர்வார்.”
இவ்வாறு ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தன எம்.பி. தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில்,
“மொட்டுக் கட்சி தனி வழியில் சென்றாலும் அந்தக் கட்சியின் அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எனப் பெரும்பாலான உறுப்பினர்கள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கே வெளிப்படையான ஆதரவை வழங்குகின்றார்கள். எனவே, ரணிலின் வெற்றியை எவரும் தடுத்து நிறுத்த முடியாது.” – என்றார்.