ஆளும் கட்சி எம்.பிக்களுக்கு ரணில் அழைப்பு.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவளிக்கும் ஆளும் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் விசேட கலந்துரையாடல் ஒன்றுக்காக ஜனாதிபதி செயலகத்துக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.
இந்தச் சந்திப்பு இன்று மாலை 5.30 மணியளவில் இடம்பெறவுள்ளது.
நேற்று நடைபெற்ற ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அரசியல் குழுக் கூட்டத்தின்போது ஜனாதிபதிக்கு ஆதரவளித்த நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இதன்போது அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.