அநுர ஜனாதிபதியான பின், ’ அநுர தோழர் ஜனாதிபதி’ – டில்வின்
ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாக பதவியேற்கும் போது 83 பில்லியன் டொலர்களாக இருந்த நாட்டின் மொத்த கடன் , இன்று 102 பில்லியன் டொலர்களாக அதிகரித்துள்ளது என மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் டில்வின் சில்வா தெரிவித்துள்ளார்.
எனவே, ஜனாதிபதி நாட்டை மீட்டெடுத்தார் என்ற கதை பொய்யானது எனவும், மேலும் ராஜபக்ஷக்கள் நாட்டை படு குழியில் தள்ளியதை ரணில் மீட்டு , அவர்களை காத்துள்ளார் என அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
தேசிய மக்கள் சக்தியால் சிலாபத்தில் நடைபெற்ற மக்கள் பேரணியில் அவர் இதனைத் தெரிவித்தார்.
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலின் பின்னர் அநுர திஸாநாயக்க ஜனாதிபதி தோழரே தவிர ஜனாதிபதி சேர் அல்ல எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.