702 விசேட வைத்தியர்கள் நாட்டை விட்டு வெளியேறியுள்ளனர்.. வைத்தியசாலை நடவடிக்கைகளுக்கு இடையூறு.
விசேட வைத்தியர்கள் 702 பேர் நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இதனால் இலங்கையில் மயக்க மருந்து நிபுணர்கள் மற்றும் சத்திரசிகிச்சை நிபுணர்கள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.
நாட்டை விட்டு வெளியேறிய வைத்தியர்களுக்குப் பதிலாக அடுத்த சிரேஷ்ட நிபுணர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளதாக அமைச்சு தெரிவித்துள்ளது.
சிறப்பு மருத்துவர்கள் இல்லாததால், பல மருத்துவமனைகளில் பணிகளில் இடையூறு ஏற்பட்டது.