ரணிலுடன் இணைந்த 105 மொட்டு பாராளுமன்ற உறுப்பினர்கள்…

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் வெற்றிக்காக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் இருந்து பாராளுமன்றத்திற்கு தெரிவான 105 பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றிணைந்துள்ளதாக ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.
நேற்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் எழுபத்தைந்து அமைச்சர்கள் ரணில் விக்கிரமசிங்கவுடன் கலந்துரையாடல் ஒன்றை மேற்கொண்டனர்.
மொட்டு தனி வேட்பாளரை முன்னிறுத்த தீர்மானித்ததன் மூலம் ஐக்கிய மக்கள் சக்தியின் ஊடாக ஜனாதிபதிக்கு ஆதரவை வழங்கத் தயாராகவுள்ள பாராளுமன்ற உறுப்பினர்களின் இணைவு மேலும் ஆதிகமாகலாம் எனவும் அவர் தெரிவித்தார்.