பருத்தித்துறையில் சந்தேகநபர் அடித்துக்கொலை : இரண்டு பொலிஸ் கான்ஸ்டபிள்கள் சஸ்பெண்ட்!

யாழ்ப்பாணம், பருத்தித்துறை பொலிஸாரால் கைது செய்யப்பட்ட சந்தேக நபரின் மரணம் தொடர்பில், பருத்தித்துறை காவற்துறையின் இரண்டு கான்ஸ்டபிள்களின் சேவை நேற்று (29) முதல் இடைநிறுத்தப்பட்டுள்ளது.

பருத்தித்துறை பிரதேசத்தில் கைது செய்யப்பட்ட இளைஞன் ஒருவர் தாக்கப்பட்டு படுகாயமடைந்த பின்னர் பொலிஸாரால் அழைத்துச் செல்லப்பட்டு சிகிச்சைக்காக பருத்தித்துறை வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.

வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் குறித்த இளைஞன் உயிரிழந்துள்ளதுடன், பிரேத பரிசோதனையின் போது அதிக இரத்தப்போக்கு காரணமாகவும், உள்ளுறுப்புகளில் ஏற்பட்ட பலத்த சேதம் காரணமாகவும் பலத்த அதிர்ச்சியினால் மரணம் ஏற்பட்டுள்ளதாக பிரேத பரிசோதனையில் தெரியவந்துள்ளது.

Leave A Reply

Your email address will not be published.