இந்தியாவுக்குச் சென்ற பொன்சேகா, இஸ்ரேலியப் பிரதிநிதிகளுடன் இரகசியப் பேச்சுவார்த்தை.

இந்தியாவிற்கு விஜயம் மேற்கொண்டிருந்த பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா அண்மையில் இலங்கை மற்றும் இந்தியாவிலுள்ள இஸ்ரேல் பிரதிநிதியை சந்தித்து இரகசிய கலந்துரையாடல் ஒன்றை நடத்தியது அரசியல்வாதிகள் மற்றும் அரசியல் ஆய்வாளர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

2010ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் முன்னணி வேட்பாளராக களமிறங்கிய சரத் பொன்சேகா, அடுத்த ஜனாதிபதித் தேர்தலுக்குத் தயாராகி வருவதை அறிந்திருக்கக் கூடிய நிலையில் சரத் பொன்சேகா, புதுடில்லி சென்று இஸ்ரேலிய தூதுவரைச் சந்தித்தமை, இந்திய அரசுக்குத் தெரியாமல் இருந்ததாக அரசியல் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அதை, தூதரக வட்டாரங்கள் உறுதி செய்துள்ளன.

SJB நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா, எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடத் தயார் என தனது X சமூக ஊடகத் தளத்தின் ஊடாக புதுடில்லிக்குச் செல்வதற்கு முன்னர் அண்மையில் அறிவித்தார்.

SJB தலைவராக தொடர்ந்தும் செயற்படும் சரத் பொன்சேகா, தனக்கும் கட்சியின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாசவுக்கும் இடையில் அதிகரித்துள்ள இடைவெளியை அண்மையில் வெளிப்படுத்தியிருந்தார்.

Leave A Reply

Your email address will not be published.