மொட்டின் 30 இலட்சம் வாக்குகள் நிலையானது.. நாமல் வேட்பாளராகி அதிஷ்டசாலி ஜனாதிபதியாகலாம்.
இளைஞர் மற்றும் பொருளாதாரக் கண்ணோட்டத்தில் தம்மிக்க பெரேராவும், நாமல் ராஜபக்ஷவும் ஜனாதிபதி வேட்பாளராக தமது கட்சியில் இருப்பதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ குட்டி ஆராச்சி தெரிவித்துள்ளார்.
பொதுஜன பெரமுனவுக்கு ஏற்கனவே முப்பது இலட்சம் என்ற நிலையான வாக்காளர் தளம் இருப்பதாகவும், கடந்த தேர்தலில் அக்கட்சிக்கு வாக்களித்த ஏழு பேரில் நால்வருக்கு வேறு கருத்துக்கள் இருக்கலாம் என்றும் அவர் கூறினார்.
இந்த ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் நான்கு பிரதான வேட்பாளர்கள் போட்டியிடுவதால், பொதுஜன பெரமுனவின் அதிர்ஷ்ட வேட்பாளர் ஜனாதிபதியாகும் சாத்தியம் இருப்பதாக அவர் மேலும் கூறினார்.
பொதுஜன பெரமுனவின் தலைமையகத்தில் இடம்பெற்ற சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.