எதிர்க்கட்சி ஆசனங்களுக்கு நாமல் ஆதரவு எம்.பி.க்கள் ?

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவளிக்கப் போவதில்லை எனத் தீர்மானித்த மஹிந்த ராஜபக்ஷ, நாமல் ராஜபக்ச உள்ளிட்ட எம்.பி.க்கள் நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி ஆசனங்களில் அமர வேண்டிய நிலை ஏற்படும் என நாடாளுமன்றத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தனியான வேட்பாளரை முன்வைக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில் உள்ள குழுவில் இருபதுக்கும் குறைவான பாராளுமன்ற உறுப்பினர்களே உள்ளனர்.

இதுவரை அரசாங்கத்துக்கு ஆதரவாக இருந்தவர்கள், தனி வேட்பாளரை முன்னிறுத்தி ஆதரிக்க உள்ளமையால் , எதிர்க்கட்சி தரப்பின் குழுவாக இயல்பாகவே மாறிவிடுவார்கள்.

எதிர்வரும் நாடாளுமன்றக் கூட்டங்களில் இந்தக் குழுவின் அமர்வு குறித்து கேள்வி எழுப்ப, ஏனைய எம்.பி.க்கள் தயாராகி வருவதாகவும் தெரிய வந்துள்ளது.

இதேவேளை, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தனி வேட்பாளரை முன்வைக்க வேண்டும் என்ற கருத்துடன் உள்ள அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்களும் கட்சியின் தீர்மானத்தால் நெருக்கடி நிலைக்குச் சென்றுள்ள நிலையில், அந்த பதவிகளை வகிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக அரசாங்கத்திற்கு எதிரான வட்டாரங்கள் தெரிவித்தன.

Leave A Reply

Your email address will not be published.