சிசேரியனின் பின் வயிற்றில் பஞ்சு உருண்டைகளை மறந்த Asiri Central மருத்துவருக்கு 30 லட்சம் அபராதம்.

சிசேரியனின் பின்னர் வயிற்றில் பருத்தி மற்றும் கோஸ்களை வைத்து விட்டு மறந்து இளம் பெண்ணின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தியமைக்காக,விசேட வைத்தியர் D.வர்ணகுலசூரிய மற்றும் பிரபல தனியார் வைத்தியசாலையான ஆசிரி சென்ட்ரல் வைத்தியசாலைக்கு 30 இலட்சம் ரூபா நட்டஈடு வழங்க கொழும்பு பிரதான மாவட்ட பிரிவு நீதிபதி சந்துன் விதான நேற்று முன்தினம் (30ம் தேதி) உத்தரவிட்டார்.

05 மாதங்களுக்கும் மேலாக சிகிச்சை செய்த விசேட வைத்தியரின் அலட்சியத்தால் அனுபவித்த துன்பங்களுக்கு ஒரு கோடி ரூபா நட்டஈட்டை பெற்றுத்தருமாறு கோரிய நீண்ட விசாரணையின் பின்னர் மாவட்ட நீதிபதி, அறுவை சிகிச்சை செய்த வைத்தியர் மற்றும் பிரபல தனியார் மருத்துவமனை இணைந்து 30 லட்சம் ரூபாயை நஷ்ட ஈடாக பெண்ணுக்கு வழங்க உத்தரவிட்டார்.

களனி தலுகம ஜொனிக்வத்தையில் வசிக்கும் திருமதி எம்.சி.டி.டி. பெரேராவினால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை ஆராய்ந்த பின்னர், 23 வயதான மனுதாரர் பெரேரா, 2016 ஆம் ஆண்டு ஜனவரி 03 ஆம் திகதி சிறப்பு மருத்துவர் டி. வர்ணகுலசூரியவின் கீழ் மத்திய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாகவும், அன்றைய தினம் மேற்கொள்ளப்பட்ட சிசேரியன் மூலம் ஆரோக்கியமான குழந்தையைப் பெற்றெடுத்ததாகவும் சட்டத்தரணி திருமதி சமந்தி கமகே தெரிவித்தார். அதன் பின்னர் ஏற்பட்ட உடல் நல பிரச்சனைகளை பல தடவைகள் தெரியப்படுத்திய போதும் அவர் அதனை உரிய முறையில் கவனிக்கவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

திருமதி சாமந்தியின் குடலில் பருத்தி போன்ற பொருள் காணப்பட்டதன் காரணமாக, அவரது உடல்நிலை மோசமடைந்ததால், உடனடியாக விசேட வைத்திய நிபுணர் மொஹான் டி சில்வாவினால் அவருக்கு சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சத்திரசிகிச்சையின் போது அவரது வயிற்றில் இருந்து இரண்டு ‘பருத்தி மற்றும் கோஸ்கள் அகற்றப்பட்டு அவற்றுடன் இணைந்திருந்த குடலின் ஒரு பகுதி அகற்றப்பட்டதாக சட்டத்தரணி கமகே தெரிவித்தார்.

சிறப்பு மருத்துவர் டி. வர்ணகுலசூரியவின் கவனக்குறைவான செயற்பாடு மற்றும் அது தொடர்பான முறைப்பாடுகளை புறக்கணித்தமையினால் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாகவும், 05 மாதங்கள் கடந்தும் தன்னால் யாருடைய உதவியும் இன்றி சுயாதீனமாக செயற்பட முடியாத நிலை ஏற்பட்டிருந்ததாகவும், சட்டத்தரணி திருமதி சாமந்தி கமகே தெரிவித்துள்ளார்

சத்திரசிகிச்சையை மேற்கொண்ட விசேட வைத்தியரின் அலட்சியத்தினாலும் , பிரபல தனியார் வைத்தியசாலையின் அலட்சியத்தினாலும் மனுதாரர் 05 மாதங்களுக்கும் மேலாக பல இன்னல்களை அனுபவித்ததாக சட்டத்தரணி சாமந்தி கமகே தெரிவித்தார்.

முன்வைக்கப்பட்ட சாட்சியங்களை பரிசீலித்த நீதிபதி, பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு சாதகமாக தீர்ப்பை வழங்கியதுடன், சிறப்பு மருத்துவரும், பிரபல தனியார் மருத்துவமனையும் வாதிக்கு 30 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க உத்தரவிட்டார்.

Leave A Reply

Your email address will not be published.