சோசலிசமா?.. முதலாளித்துவமா?.. திசைகாட்டி பொருளாதாரக் கொள்கை வகுக்கப்படுவதில் சூடான விவாதங்கள்..
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி தேர்தல் விஞ்ஞாபன தயாரிப்பின் போது காரசாரமான விவாதங்கள் இடம்பெற்றுள்ளதாக உள்ளகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதற்கான காரணங்கள் சோசலிசப் பொருளாதாரக் கொள்கைகளுக்கும், நவதாராளவாதப் பொருளாதாரக் கொள்கைகளுக்கும் உள்ள முரண்பாடுகள்.
அத்துடன், சர்வதேச நாணய நிதியத்துடன் ஏற்கனவே செய்துள்ள ஒப்பந்தத்தை தொடர்வது மற்றும் அதன் திருத்தங்கள் தொடர்பிலும் விவாதங்கள் இடம்பெற்றுள்ளன.
அரச சேவையினரின் சம்பளக் கோரிக்கைகள், மக்கள் மீது சுமத்தப்பட்டுள்ள வரி குறைப்பு, பொது வருமானம் ஈட்டுவது தொடர்பான பிரச்சினைகள் போன்றவற்றிலும் இவ்வாறான சூழ்நிலைகள் உள்ளன.
தேசிய மக்கள் சக்தி (NPP)) இதுவரையில் தமது பொருளாதாரக் கொள்கையை வெளியிடாததுடன், அது தொடர்பில் கேள்வி எழுப்பும் போதெல்லாம் ஜனாதிபதி தேர்தல் அறிவிக்கப்பட்ட பின்னர் தமது நிகழ்ச்சி நிரலை முன்வைப்போம் என கூறி வருகின்றனர்.