சீனாவில் இருந்து கொண்டு வரப்பட்ட தகுதியற்ற 30 கன்டெய்னர் மீன் டின்கள் துறைமுகத்தில் சிக்கியது.
பல வருடங்களாக டீப் ஃப்ரீசர்களில் வைக்கப்பட்ட மீன்களில் இருந்து தயாரிக்கப்பட்ட, மனித பாவனைக்கு தகுதியற்ற தரம் தாழ்ந்த மீன்கள் இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாகவும், அவற்றை சுங்கத்திலிருந்து விடுவிப்பதில் சிக்கல்கள் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
டின்மீன் இறக்குமதிக்கு தடை விதிக்கப்பட்டுள்ள போதிலும் கடந்த காலப்பகுதியில் பாரியளவிலான டின் மீன்கள் இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக சந்தை வட்டாரங்கள் மேலும் தெரிவிக்கின்றன.
தரக்குறைவான டின் மீன்களை இறக்குமதி செய்து மிகக் குறைந்த விலைக்கு விற்பனை செய்வதன் மூலம் சில இறக்குமதியாளர்கள் வேறு கடத்தல் நடவடிக்கைகளை மேற்கொள்வதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
டின் மீன்களுக்கு இறக்குமதி தடை விதிக்கப்பட்டுள்ள போதிலும் இந்த கடத்தல் இடம்பெற்று வருவதாக புறக்கோட்டை சந்தை வட்டாரங்கள் மேலும் தெரிவிக்கின்றன.