15 லட்சம் லஞ்சம் வாங்கிய இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரனின் செயலாளர் கைது

வர்த்தக இராஜாங்க அமைச்சர் எஸ். வியாழேந்திரனின் பிரத்தியேக செயலாளர் மட்டக்களப்பில் இலஞ்ச ஊழல் ஆணைக்குழு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

மட்டக்களப்பு பிரதேசத்தில் புவியியல் மற்றும் அகழ்வு பணியகத்தில் அனுமதிப்பத்திரம் வழங்குவதற்கு வர்த்தகர் ஒருவரிடம் இருந்து 15 இலட்சம் ரூபா இலஞ்சம் பெற்ற போது இந்த கைது இடம்பெற்றுள்ளது.

கைது செய்யப்பட்டவர் கரடியனாறு பகுதியைச் சேர்ந்தவர்.

இராஜாங்க அமைச்சரின் பிரத்தியேக செயலாளர் மட்டக்களப்பு அரசியல் காரியாலயத்தில் லஞ்சப் பணத்தை பெற்றுக்கொண்ட போதே இந்த கைது இடம்பெற்றுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.