கைதான கஞ்சிபானி இம்ரான், ரொட்டும்ப அமில , லொக்கு பெட்டி ஆகிய கைதான மூவரில் , இருவர் தப்பிவிட்டனர்

கிளப் வசந்த் கொலை மற்றும் பாதாள உலகக் குற்றச் செயல்களுடன் தொடர்புடைய பல வழக்குகளின் மூளையாகச் செயல்பட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், நாட்டை விட்டு தப்பிச் சென்ற பாதாள உலகத் தலைவர் கஞ்சிபானி இம்ரான் மற்றும் பாதாள உலகக் குழு உறுப்பினர் லொக்கு பெட்டி ஆகியோர் கைது செய்யப்பட்டதாக ஆகஸ்ட் 1ஆம் திகதி சர்வதேச தகவல்களை மேற்கோள்காட்டி பொலிஸாரால் அறிவிக்கப்பட்ட நிலையில் , பின்னர் ரொட்டும்ப அமில என்ற பாதாள உலக தலைவரும் கைது செய்யப்பட்டார் என தெரியவந்தது.

ஆனால் தற்போது வேறு ஒரு செய்தி வெளியாகியுள்ளது.

கஞ்சிபானி இம்ரான் பெலாரஸ் மற்றும் பிக் பட்டி துபாயில் கைது செய்யப்பட்டதாக முதற்கட்ட பொலிஸ் அறிக்கைகள் தெரிவித்த போதிலும், பின்னர் கஞ்சிபானி இம்ரான், லொக்கு பெட்டி மற்றும் ரொடும்பா அமில ஆகியோர் பெலாரஸ் வழியாக ரஷ்யாவுக்குச் செல்லும்போது கைது செய்யப்பட்டதாகக் கூறப்பட்டது, ஆனால் லொக்கு பெட்டி மட்டுமே கைதாகி , மற்ற இருவரும் தப்பியதோடு , அவர்களுடன் இருந்தவர்கள் விடுவிக்கப்பட்டனர் என தெரிவிக்கப்படுகிறது.

பிரான்சில் பதுங்கியிருந்த இந்த மூவரும் மேலும் மூன்று உதவியாளர்களுடன் பெலாரஸுக்குத் தப்பிச் செல்ல முயன்றதாகவும், பிரெஞ்சு எல்லையில் கைது செய்யப்படவிருந்த நிலையில் தப்பி விட்டதாக அந்தச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் பின்னர் அவர்கள் பெலாரஸில் இருந்து ரஷ்யாவிற்கு தப்பிச் செல்லும் போது கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த கைது இலங்கையில் நடந்த குற்றங்களுடன் தொடர்புடையது அல்ல என்றும், எல்லை மீறல் மற்றும் விசா தொடர்பான பிரச்சினைகள் தொடர்பானது என்றும் தகவல் அறிக்கை தெரிவிக்கிறது.

கஞ்சிபானி இம்ரான், லொகு பெட்டி, ரொடும்ப அமில உள்ளிட்ட குற்றக் கும்பலைச் சேர்ந்த 6 பேர் பிடிபட்டதாகவும், ஆனால் கஞ்சிபானி, ரொடும்பா அமிலா ஆகியோர் அங்கிருந்து தப்பிச் சென்றதாகவும், எஞ்சியவர்களில் லொகு பட்டி தடுத்து வைக்கப்பட்டு , ஏனையோர் பின்னர் விடுவிக்கப்பட்டதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது.

பிடிபட்ட லொக்கு பெட்டி தொடர்பில் சிறிலங்கா பொலிஸார் எவ்வாறு செயற்படுவார்கள் என்பது இன்னும் தெரிவிக்கப்படவில்லை.

Leave A Reply

Your email address will not be published.