மொட்டின் இன்னோரு மாவட்டமும் மாற்றம் : சாகர வேண்டாம்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் பதவிக்கு சாகர காரியவசம் சற்றும் பொருத்தமானவர் அல்ல என அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
எனவே, அந்த பதவிக்கு அமைச்சர் ரமேஷ் பத்திரனவை நியமிக்க வேண்டும் என அவர் பரிந்துரைத்தார்.
மாத்தறை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் மாவட்டக் குழுவினால் இந்த பிரேரணை நிறைவேற்றப்பட்டுள்ளது.
மேலும் கட்சிக்கு புதிய பொறுப்பாளரை நியமிக்க வேண்டும் என மாவட்ட வாரியத்திலும் பிரேரணை ஏற்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் மாத்தறை மாவட்ட பொதுஜன பெரமுன , தலைவர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு பூரண ஆதரவை வழங்குவது என்ற தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன.