கியுவை இல்லாமல் செய்தமைக்கு வாக்களிக்க வேண்டியது ரணிலுக்கு அல்ல, இந்தியாவின் மோடிக்கு..- SJB பேஷல மனோஜ்

கியுவை இல்லாமல் செய்ததற்கு வாக்களிக்க வேண்டியது ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு அல்ல இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு என இசையமைப்பாளர் பேஷல மனோஜ் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் SJB கலா சங்கத்தினால் நடாத்தப்பட்ட ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
நாடு அவமானத்துக்கும் சாபத்துக்கும் நடுவில் இருந்த காலம் முடிவுக்கு கொண்டுவரப்பட வேண்டும் என்றும், ராஜபக்ஷ மற்றும் விக்கிரமசிங்க காலத்தில் இந்த நாட்டின் பிரஜைகள் அதிகபட்ச தண்டனையை அனுபவித்துள்ளனர் என்றும் அவர் கூறினார்.
ஆறு தடவைகள் பிரதமராக இருந்த ரணில் விக்கிரமசிங்க தற்போது புதிய யுகம் பற்றி பேசுவதாகவும் ரணில் விக்கிரமசிங்க பலமாக இருந்தால் ஐக்கிய தேசியக் கட்சி பூஜ்ஜியத்திற்கு விழாது எனவும் பேஷல மனோஜ் தெரிவித்தார்.