திசைகாட்டி அரசும் IMF வேலைத்திட்டத்தை முன்னெடுத்துச் செல்லும் – மஹிந்த ஜயசிங்க
தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் கீழ் சர்வதேச நாணய நிதியத்துடன் தாங்கள் தொடர்ந்து செயற்படவுள்ளதாக கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினர் மகிந்த ஜயசிங்க தெரிவித்துள்ளார்.
தேசிய பத்திரிகையொன்றுக்கு வழங்கிய கலந்துரையாடலில் அவர் இவ்வாறு கருத்து தெரிவித்துள்ளார்.
இலங்கை ஏற்கனவே சர்வதேச நாணய நிதியத்தில் இணைந்துள்ளது. அதனால் அங்கிருந்து வெளியேற முடியாது. நாம் சிறிது காலம் அதை முன்னெடுத்துச் செல்ல வேண்டும்.
கடனை நிர்வகிக்கவும், பொருளாதாரத்தை கட்டியெழுப்பவும் எங்களிடம் திட்டம் உள்ளது. இரண்டரை லட்சம் தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளன. எங்களுடைய சொந்த பொருளாதார வேலைத்திட்டத்தின் மூலம் இந்த நாட்டை கட்டியெழுப்புகிறோம்.