ஜனாதிபதி ரணிலுக்கு கிறிஸ்தவ வலைப் பின்னல் ஆதரவு!

இவ்வருட ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவளிக்கத் தயார் என கிறிஸ்தவ மதகுருமார்களின் வலையமைப்பின் செயலாளர் நாயகம் அருட்தந்தை ரத்நாயக்க தெரிவித்துள்ளார். ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் ருவான் விஜயவர்தனவை சந்தித்த போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவில் இந்த சந்திப்பு இடம்பெற்றதுடன், கடந்த இரண்டு வருடங்களில் ஜனாதிபதி முன்னெடுத்த வேலைத்திட்டம் பாராட்டுக்குரியது என கிறிஸ்தவ மதகுருமார் வலையமைப்பின் மதகுருமார் தெரிவித்துள்ளனர். இந்நிகழ்வில் சிறிகொத்த தலைமையகத்தைச் சேர்ந்த அதிகாரிகள் குழுவும் கலந்துகொண்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.